Saturday, November 21, 2015

தேங்க்ஸ்கிவிங்


நம்ம ஊரு பொங்கல்ல தான் அமெரிக்கா, கன்னடா போன்ற பல நாடுகளில் "தேங்க்ஸ்கிவிங்"னு கொண்டாடறாங்க. "தேங்க்ஸ்கிவிங்" எதுக்கு கொண்டாடறாங்கனு நம்ம ஆன்சைட் மக்களை கேட்டா செம காமெடி பதில் போங்க. பதிலை கேட்போம்.

1) லீவ், நல்ல ரெஸ்ட்டு எடுக்கலாம்[என்னமோ ஆபீஸ் போய் மட்டும் பெரிசா கிழிக்கிற மாதிரி] எப்பவும் வொர்க் ப்ரோம் ஹோம் எடுக்கரவர் இதைச் சொல்கிறார் ;)

2) ஒரு லாங் டிரைவ், ஒரு லாங் ட்ரிப் போவோம்[என்னமோ புதுசா போற மாதிரி, எப்ப பார்த்தாலும் ட்ரிப் பிளான் பண்ற வேல தான் இவங்களுக்கு]. மச்சி, ஒரு வாட்ஸ்ஆப் குரூப் க்ரியேட் பண்ணு, டிஸ்கஸ் பண்ணுவோம். ப்ராஜெக்ட் பத்தி கூட அப்படி ஒரு டிஸ்கஸ்சன் இருக்காது. என்ன ஒரு டிஸ்கஸ்சன்னு, இந்த டிஸ்கஸ்சன்னுக்கு கால் கான்பரன்சு வேற ;)
அச்சச்சோ, ஆப்சைட் கூட மீட்டிங் இருக்கே, அத கேன்சல் பண்ணு மச்சி க்லைன்ட்டோட பிஸினு

3) ப்ரண்ட்ஸ் வோட ஒரு அவுட்டிங், டின்னர் அவுட்சைடு, பாட்லக் னு ஒரு கொண்டாட்டம் [பெமிலி இந்தியால இருக்கு பா, மறந்திடாதிங்க :)]

இது தான் அல்டிமேட், ரியாலிட்டி நம்ம பசங்க, பொண்ணுங்க சொல்றது,
4) "தேங்க்ஸ்கிவிங்" ஆ "ஷாப்பிங் ஷாப்பிங்".[சரி, நாமலும் அப்படியே ஒன்னு வாங்க சொல்வோம், DSLR தான் மாத்தனும், அப்படியே ஒரு DSLR வாங்கிடுங்க வித் ப்ரைம் அன்ட் ஜூம் லென்ஸ் வோட, டோன்ட் பர்கெட் ;)]

இன்னும் சில பேர் இல்லை இல்லை பல பேர்,
5) "தேங்க்ஸ்கிவிங்" ஆ போன், தொலைக்காட்சி எக்ஸ்சேன்ச் பண்ணனும், ஒரு டாலர்க்கு போன் வாங்கணும். [ஒரு டாலர்க்குலாம் போன் வேண்டாம், நாங்க காஸ்ட்லி போன்ல தான் பேசுவோம்;) Iphone 7 ரிலீஸ் ஆகட்டும், சொல்றோம்]

இவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், "தேங்க்ஸ்கிவிங்" அறுவடை நல்ல படியா செய்ததற்கும் அடுத்த அறுவடை நன்கு அமையவும் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவே ஆகும். சுருக்கமா சொன்னா நம்ம ஊரு பொங்கல் தாங்க[பொங்கல்லா?? அப்படின்னா என்னன்னு  கேட்றாதிங்க, டென்ஷன் ஆகிவிடுவேன் ;)]

ஒவ்வொரு நாடும் வெவ்வேறு நாள் இந்த சிறப்பு விழாவை கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நான்காவது வியாழனும், கனடாவில் அக்டோபர் இரண்டாம் திங்களும் மற்றும் பல நாடுகளில் வெவ்வேறு நாள் கொண்டாடப்படுகிறது.

சரி, நம்ம அறுவடை விழா பொங்கலுக்கு ஊருக்கு வந்து சேருங்க!! பிலைட் டிக்கெட்டுக்கு ஆபர் போட சொல்லிடலாம் ;)

-Prathi

2 comments: