பாரிஸ் நிகழ்வுகளை கண்டு மனம் நெகிழ்ந்தது. காலையில் எழுந்ததும் படித்த முதல் செய்தி, மிகக் கொடூரமான கோரச் செய்தி. மும்பை 26/11 நிகழ்வுகளும் அமெரிக்காவின் 11/09 நிகழ்வுகளும் கண் முன்னே ஓடிற்று. இந்த கலியுகம் அழிய இயற்கைச் சீற்றங்கள் தேவை இல்லை, இந்த பிணந்தின்னிகளே போதும். இந்த மனித நேயமற்ற மடச் சாம்பிராணிகள் திருந்துவார்கள் என்று நம்பினால் பெரும் முட்டாள்தனம். இந்த கொலைக் கொடூரர்களை சொல்லியும் திருத்த முடியாது, பட்டும் திருந்த மாட்டார்கள். இந்த தீவிர வாதத்தால் தங்கள் கொள்கைகள் நிறைவேறும் என்ற முட்டாள்தனம் அழிந்தாலே இவ்வுலகம் காப்பாற்றப்படும்.
No comments:
Post a Comment