இதுவல்லவா வாழ்க்கை!!!! மேலே உள்ள படம் என் வாழ்க்கையை திரும்பி பார்ப்பது போல் அழகாக உள்ளது :)
எங்கே சென்றது இப்படிப்பட்ட என் குழந்தைப் பருவ வாழ்க்கை?? வருடம் 2000ம் ஆண்டு தொடங்குவதற்கு முன் பிறந்த குழந்தைகளுக்குத் தெரியும், இந்த வாழ்க்கை எப்பேற்பட்ட பொற்காலம் என்று. வாசல்களிலும், தெருக்களிலும் ஓடி விளையாடுதல், பல்லாங்குழி, கோலிக்குண்டு, பாண்டி, நொண்டி, தாயக்கரம், ஆற்றிலும் கிணற்றிலும் நீச்சல், மீன் பிடித்தல், நெல் அறுவடையின் போது வைக்கோல் போற்றின் மேல் விளையாடுதல், சைக்கிள் பயணம், இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வாழ்க்கை எங்கு சென்றது? மனம் வேதனை கொள்கிறது ஏன் இந்தக் கால சங்கதிகளுக்கு இந்த அழகான வாழ்க்கை கிடைக்கவில்லை என்பதை எண்ணுகையில். அலைபேசி, வீடியோ கேம்ஸ், கார்ட்டூன் சேனல்ஸ் என தங்கள் பிள்ளைகளின் குழந்தைப் பருவ வாழ்க்கையை அழிக்கிறார்கள் இன்றையக் காலப் பெற்றோர்கள்.
எப்போது பார்த்தாலும் இந்த வகுப்புக்கு அனுப்புகிறோம், அந்த வகுப்புக்கு அனுப்புகிறோம் என்று 24 மணி நேரத்திற்கும் அவர்களுக்கு டைம்டேபிள் போடாதீர். அபாகஸ் வகுப்பு மட்டும் இந்த உலகில் இல்லை, பல விளையாட்டு, இயல், இசை, நாடகம், ஓவியம், நடனம் என பல கலைகள் உள்ளன, அதில் அவர்களின் விருப்பத்தை அறிந்து வகுப்புகளுக்கு அனுப்புங்கள்.
இயல்பான வாழ்க்கை முறைகளைக் கற்றுக் கொடுங்கள். அன்பாகவும், வாழ்க்கையை நற்சிந்தனையாக எதிர்கொள்ளவும், அழகாக பார்க்கவும், நேர்மையாய் இருக்கவும், நன்மை தீமைகளை பகுத்தறியவும் கற்றுக்கொடுங்கள்.
"அன்பாய் இரு அரக்கனாய் இராதே
ஆண் மகனாக இரு ஆணவத்தோடு இராதே
பாசத்தோடு இரு பகைவனாய் இராதே
நேசத்தோடு இரு நேர்மை அற்று இராதே
நல்லவனாய் இரு நற்பெயர் அற்று இராதே
வல்லவனாய் இரு வஞ்சகனாய் இராதே
நகைச்சுவையோடு இரு நடிகனாக இராதே
பொறுமையாயை இரு பொறுப்பற்றவனாய் இராதே
கனிவோடு இரு கலவானவனாக இராதே
மதியோடு இரு மனசாட்சி அற்று இராதே"
என்று கற்றுக் கொடுங்கள். அது போதும் அவர்கள் வாழ்க்கையை அழகாக வாழ்வதற்க்கு.
இன்றையக் கால குழந்தைகள், தாத்தா, பாட்டிகளிடம் ஸ்கைப், பேஸ்டைம்களில் தான் உறவாடுகிறார்கள். ஒரு படிக்கு மேல் சென்று விட்டனர் இன்றைய காலச் சங்கதிகள், அப்பா அம்மா, கணவன் மனைவி, குழந்தைகளிடமே ஸ்கைப், பேஸ்டைம்களில் தான் உறவு முறை. குடும்ப உறவு முறைகளையும், முக்கியத்துவங்களையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
விழியுங்கள்!! சொர்க்கம் நகரத்தில் அல்ல, கிராமத்தில் மட்டுமே என்று அடித்துச் சொல்வேன்!! கிராமத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள் இன்றைய கால சங்கதிகளுக்கு. கிராமம் 'வெக்கேசன் டைம்' காக மட்டும் என்று பார்க்காமல், வாழ்க்கை வாழ்வதற்கும் தான் என்பதை உணருங்கள்!!
வாழ்கையில் பணம் முக்கியமே, ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை உணருங்கள். போதும் என்ற மன நிலையை பெறுங்கள். வாழ்க்கை அழகாகத் தெரியும்.
நம் பாரம்பரிய உணவு முறைகள் எங்கு சென்றது?? பாஸ்ட் புட், சைனீஸ் புட் என நம் பாரம்பரிய உணவு முறைகளே அழிந்துவிட்டன. சிறு தானியங்களை உணவு முறைகளில் சேற்றுக் கொள்ளுங்கள். இயற்கை விவசாயத்தையும் இயற்கை மருத்துவ முறைகளையும் கையாளுங்கள். வீரிய ஒட்டு விதைகள்(ஹைபிரீடு விதைகள்) என்று சொல்லக்கூடிய மரபனு மாற்றப்பட்ட விதைகள் அதிக லாபம் கொடுக்கிறது என்று விதைக்காதீர்கள்!! இது நீங்கள் உங்கள் சங்கதிகளின் அழிவிற்கு நீங்களே விதைக்கும் விதை ஆகும்!!
இந்த வாழ்க்கை வாழ ஆசைப் படு பாலகுமாரா!!!!!!! உன் வாழ்க்கை ஒரு அழகானப் பொற்காலம் :) :)
Good one ...keep writing...
ReplyDeleteகண்டிப்பாக, மிக்க நன்றி முத்து :)
DeleteGood one ...keep writing...
ReplyDelete