பல லட்சங்கள்,கோடிகள் கொடுத்து வாங்கிய வீடுகள், வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின, குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லை, உண்ண உணவு இல்லை, மின்சாரம் இல்லை, சாலையிலோ படகு பயணம் "முடங்கினது சென்னை"
"சென்னையில் ஒரு மழைக் காலம்" என்று கொண்டாடும் மக்கள் இன்றோ "சென்னையில் ஒரு சாக்கடைக் காலம்" என்று தத்தளிக்கிறார்கள். மழை பெய்யவில்லை பெய்யவில்லை என்று கொந்தளிப்போடு கர்ஜிக்கும் மக்களுக்கு தெயரியவில்லை, பூமாதேவி போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அள்ளிக் கொடுப்பவள் என்று. அவள் அள்ளிக் கொடுக்கும் போது எப்படி பெற்று அதை சேகரிக்க வேண்டும் என்று தெயரியவில்லை இவ்வரசுக்கு.
அனைத்து தொலைக்காட்சிகளிலும் "தத்தளிக்கும் சென்னை" ஜெயா தொலைக்காட்சியிலாே "கொண்டாட்டத்தில் சென்னை";)
அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால் பல அரசியல் கட்சிகள் முன் வந்துள்ளது மக்களுக்கு உதவுவதற்கு, எப்படியோ இப்பவாவது முன்வந்து உள்ளனரே!!
2005ல் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து ஆகி தள்ளி போனது, அதன் பிறகு இப்பொழுது தான். என்ன ஒரு ஆனந்தம் இம் மாணவ மாணவியருக்கு என்பதை நான் அறிவேன் :) "இரமணன்", தமிழ்நாட்டின் நட்சத்திரம் ஆனார், மாணவ மாணவியரின் நாயகர் ஆனார் :)
போதுமான வடிகால் திட்டம் இல்லை, ஏரிகள் பல காணாமல் போனது, ஏரிகள் பல பிளாட்டுக்கள் ஆகின, ஏரிகள் பல தூர் வாரப்படாமல் பல ஆண்டுகள் ஆகின. அரசியல் வாதிகள் ஓட்டு கேட்கையில் காசுக்காக தங்கள் உரிமைகளை விற்கும் மக்கள் என்று தான் உனர்வார்கள் தங்கள் உரிமை விலை மதிப்பற்றது என்று, அதை விலை கொடுத்து வாங்க முடியாது என்று அரசியல் வாதிகளுக்கு போதிக்க வேண்டும். அடிப்படை தேவைகள், ஊர் வளர்ச்சி, மாவட்ட வளர்ச்சி, மாநில வளர்ச்சி பெற எந்த ஒரு அரசு பாடுபடுமோ அவ்வரசுக்கு தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்யுங்கள். இப்படி செய்திருந்தால் இன்று இப்படி ஒருநிலைமையில் தத்தளிக்க தேவை இல்லை.
ஆற்று மணல் ஏலம் விடும் அரசுக்கு(அரசியல் வாதிகளுக்கு) தெரிவது பணம் மட்டுமே. மணல் எவ்வளவு முக்கியம் தண்ணீரை ஈர்ப்பதற்க்கு, இதை என்று தான் உணரும் தமிழ்நாடு அரசு?
தமிழ்நாட்டில் அணைகள் போதும் அளவு இல்லாததே காலம் காலமாக இருக்கும் பெரும் பிரச்சனை. அணைகள் கட்டுவதற்கு என்ன திட்டங்கள் எடுத்தது இந்த தமிழ்நாடு அரசு? எந்த ஒரு அரசியல் கட்சி தமிழ்நாட்டில் வென்றாலும் ஒரு மாற்றமும் இல்லை தமிழ்நாட்டில். ஏரிகள், அணைகள் போதும் அளவு இருப்பின், எந்த ஒரு மாநிலத்திடமும் தண்ணீர்க்கு எதிர் பார்க்க தேவை இல்லை,"போங்கடா செர்த்தான்,நீங்களும் உங்க தண்ணியும்னு" ஒய்யாரமாக சொல்லலாம்.
No comments:
Post a Comment