Saturday, November 21, 2015

தேங்க்ஸ்கிவிங்


நம்ம ஊரு பொங்கல்ல தான் அமெரிக்கா, கன்னடா போன்ற பல நாடுகளில் "தேங்க்ஸ்கிவிங்"னு கொண்டாடறாங்க. "தேங்க்ஸ்கிவிங்" எதுக்கு கொண்டாடறாங்கனு நம்ம ஆன்சைட் மக்களை கேட்டா செம காமெடி பதில் போங்க. பதிலை கேட்போம்.

1) லீவ், நல்ல ரெஸ்ட்டு எடுக்கலாம்[என்னமோ ஆபீஸ் போய் மட்டும் பெரிசா கிழிக்கிற மாதிரி] எப்பவும் வொர்க் ப்ரோம் ஹோம் எடுக்கரவர் இதைச் சொல்கிறார் ;)

2) ஒரு லாங் டிரைவ், ஒரு லாங் ட்ரிப் போவோம்[என்னமோ புதுசா போற மாதிரி, எப்ப பார்த்தாலும் ட்ரிப் பிளான் பண்ற வேல தான் இவங்களுக்கு]. மச்சி, ஒரு வாட்ஸ்ஆப் குரூப் க்ரியேட் பண்ணு, டிஸ்கஸ் பண்ணுவோம். ப்ராஜெக்ட் பத்தி கூட அப்படி ஒரு டிஸ்கஸ்சன் இருக்காது. என்ன ஒரு டிஸ்கஸ்சன்னு, இந்த டிஸ்கஸ்சன்னுக்கு கால் கான்பரன்சு வேற ;)
அச்சச்சோ, ஆப்சைட் கூட மீட்டிங் இருக்கே, அத கேன்சல் பண்ணு மச்சி க்லைன்ட்டோட பிஸினு

3) ப்ரண்ட்ஸ் வோட ஒரு அவுட்டிங், டின்னர் அவுட்சைடு, பாட்லக் னு ஒரு கொண்டாட்டம் [பெமிலி இந்தியால இருக்கு பா, மறந்திடாதிங்க :)]

இது தான் அல்டிமேட், ரியாலிட்டி நம்ம பசங்க, பொண்ணுங்க சொல்றது,
4) "தேங்க்ஸ்கிவிங்" ஆ "ஷாப்பிங் ஷாப்பிங்".[சரி, நாமலும் அப்படியே ஒன்னு வாங்க சொல்வோம், DSLR தான் மாத்தனும், அப்படியே ஒரு DSLR வாங்கிடுங்க வித் ப்ரைம் அன்ட் ஜூம் லென்ஸ் வோட, டோன்ட் பர்கெட் ;)]

இன்னும் சில பேர் இல்லை இல்லை பல பேர்,
5) "தேங்க்ஸ்கிவிங்" ஆ போன், தொலைக்காட்சி எக்ஸ்சேன்ச் பண்ணனும், ஒரு டாலர்க்கு போன் வாங்கணும். [ஒரு டாலர்க்குலாம் போன் வேண்டாம், நாங்க காஸ்ட்லி போன்ல தான் பேசுவோம்;) Iphone 7 ரிலீஸ் ஆகட்டும், சொல்றோம்]

இவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், "தேங்க்ஸ்கிவிங்" அறுவடை நல்ல படியா செய்ததற்கும் அடுத்த அறுவடை நன்கு அமையவும் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவே ஆகும். சுருக்கமா சொன்னா நம்ம ஊரு பொங்கல் தாங்க[பொங்கல்லா?? அப்படின்னா என்னன்னு  கேட்றாதிங்க, டென்ஷன் ஆகிவிடுவேன் ;)]

ஒவ்வொரு நாடும் வெவ்வேறு நாள் இந்த சிறப்பு விழாவை கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நான்காவது வியாழனும், கனடாவில் அக்டோபர் இரண்டாம் திங்களும் மற்றும் பல நாடுகளில் வெவ்வேறு நாள் கொண்டாடப்படுகிறது.

சரி, நம்ம அறுவடை விழா பொங்கலுக்கு ஊருக்கு வந்து சேருங்க!! பிலைட் டிக்கெட்டுக்கு ஆபர் போட சொல்லிடலாம் ;)

-Prathi

ThoughtS AnD ExpressionS

Some thoughts always run in my mind & I got time to put down in words today..!!
- 10/01/2015
To Everyone - It applies in home, outside, office, Etc..!!
Please try it out for sure. You feel the change smile emotic


1) Wish & Respect everyone irrespective of Caste, Work levels, Etc with whomever you meet daily, it gives a big smile in their face as well as on your face too smile emoticon

2) Saying a small Thanks means a lot to other..!

3) Donate Blood - U feel u did a good job than delivered a project smile emoticon
Men can donate 4 times in a year & Women can donate 3 times in a year. My next turn is in March, Proud myself to donate every time

4) Give a way to Ambulance & keep a 'Humanity' alive. Pray for a second when it crosses u..! Pray for others, God will definitely give you reward..!!

5) Help each other - One day you receive back from someone..!

6) Don't trust anyone easily, be yourself & cautious. When someone trust you, don't be a spoilsport

7) Don't spoil the nature, instead Protect the nature - It protects you back smile emoticonPlant saplings..

8) Don't dump all your money for your investments & savings - try to spend for a needy once in a while. God gives you back more smile emoticon

9) Value the 2 ships - relationship & friendship. Spend time with Family, with needy kids, with elders & with Pets - You filled with smile for sure

10) At last, live a good & healthy life for yourself instead of always running behind for money. Our turn to move out from this world soon, Keep in mind..!

U.S Open Championship: Women's Singles

"U.S Open Championship: Women's Singles" - 13.09.2015

"Whatever the result, Italy wins". A different finals in the Grand Slam and it's good smile emoticon

Pennetta, Congratz Congratz Congratz.. I'm very much happy for you girl. What a perfect way to say Goodbye to Tennis. First Grand Slam and it's a happy and proud moment. A dream come true for you, Enjoy the Moments smile emoticon Somehow you inspired me so much. Thank You smile emoticon

Serena, I know how hard it is, but I felt you got so much pressure from the whole world about your mark to "grab all the 4 major championships in the same year and match the Grand Slam Singles title with Steffi", Thats the pressure made you to lost the game. Make up your mind and practice hard, 2016 is Yours smile emoticon

Vinci, You rocked and you broke the myth and proved "It's a game and anyone practice and play well will definitely win". Congratz and happy for You.

Venus, Though your fitness played a major concern in your Tennis Career, You are the most watchable player ever and you ruled the Tennis arena once. It's a nice come back and you reached U.S Open Semi's after 5 years.


-Prathi

Tuesday, November 17, 2015

"முடங்கினது சென்னை"


பல லட்சங்கள்,கோடிகள் கொடுத்து வாங்கிய வீடுகள், வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின, குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லை, உண்ண உணவு இல்லை, மின்சாரம் இல்லை, சாலையிலோ படகு பயணம்  "முடங்கினது சென்னை"

"சென்னையில் ஒரு மழைக் காலம்" என்று கொண்டாடும் மக்கள் இன்றோ "சென்னையில் ஒரு சாக்கடைக் காலம்" என்று தத்தளிக்கிறார்கள். மழை பெய்யவில்லை பெய்யவில்லை என்று கொந்தளிப்போடு கர்ஜிக்கும் மக்களுக்கு தெயரியவில்லை, பூமாதேவி போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அள்ளிக் கொடுப்பவள் என்று. அவள் அள்ளிக் கொடுக்கும் போது எப்படி பெற்று அதை சேகரிக்க வேண்டும் என்று தெயரியவில்லை இவ்வரசுக்கு.

அனைத்து தொலைக்காட்சிகளிலும் "தத்தளிக்கும் சென்னை" ஜெயா தொலைக்காட்சியிலாே "கொண்டாட்டத்தில் சென்னை";)

அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால் பல அரசியல் கட்சிகள் முன் வந்துள்ளது மக்களுக்கு உதவுவதற்கு, எப்படியோ இப்பவாவது முன்வந்து உள்ளனரே!!

2005ல் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து ஆகி தள்ளி போனது, அதன் பிறகு இப்பொழுது தான். என்ன ஒரு ஆனந்தம் இம் மாணவ மாணவியருக்கு என்பதை நான் அறிவேன் :) "இரமணன்", தமிழ்நாட்டின் நட்சத்திரம் ஆனார், மாணவ மாணவியரின் நாயகர் ஆனார் :)

போதுமான வடிகால் திட்டம் இல்லை, ஏரிகள் பல காணாமல் போனது, ஏரிகள் பல பிளாட்டுக்கள் ஆகின, ஏரிகள் பல தூர் வாரப்படாமல் பல ஆண்டுகள் ஆகின. அரசியல் வாதிகள் ஓட்டு கேட்கையில் காசுக்காக தங்கள் உரிமைகளை விற்கும் மக்கள் என்று தான் உனர்வார்கள் தங்கள் உரிமை விலை மதிப்பற்றது என்று, அதை விலை கொடுத்து வாங்க முடியாது என்று அரசியல் வாதிகளுக்கு போதிக்க வேண்டும். அடிப்படை தேவைகள், ஊர் வளர்ச்சி, மாவட்ட வளர்ச்சி, மாநில வளர்ச்சி பெற எந்த ஒரு அரசு பாடுபடுமோ அவ்வரசுக்கு தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்யுங்கள். இப்படி செய்திருந்தால் இன்று இப்படி ஒருநிலைமையில் தத்தளிக்க தேவை இல்லை.

ஆற்று மணல் ஏலம் விடும் அரசுக்கு(அரசியல் வாதிகளுக்கு) தெரிவது பணம் மட்டுமே. மணல் எவ்வளவு முக்கியம் தண்ணீரை ஈர்ப்பதற்க்கு, இதை என்று தான் உணரும் தமிழ்நாடு அரசு?

தமிழ்நாட்டில்  அணைகள் போதும் அளவு இல்லாததே காலம் காலமாக இருக்கும் பெரும் பிரச்சனை. அணைகள் கட்டுவதற்கு என்ன திட்டங்கள் எடுத்தது இந்த தமிழ்நாடு அரசு? எந்த ஒரு அரசியல் கட்சி தமிழ்நாட்டில் வென்றாலும் ஒரு மாற்றமும் இல்லை தமிழ்நாட்டில். ஏரிகள், அணைகள் போதும் அளவு இருப்பின், எந்த ஒரு மாநிலத்திடமும் தண்ணீர்க்கு எதிர் பார்க்க தேவை இல்லை,"போங்கடா செர்த்தான்,நீங்களும் உங்க தண்ணியும்னு" ஒய்யாரமாக சொல்லலாம்.

Monday, November 16, 2015

பாரிஸ் தீவிரவாத படுகொலை 13/11

பாரிஸ் நிகழ்வுகளை கண்டு மனம் நெகிழ்ந்தது. காலையில் எழுந்ததும் படித்த முதல் செய்தி, மிகக் கொடூரமான கோரச் செய்தி. மும்பை 26/11 நிகழ்வுகளும் அமெரிக்காவின் 11/09 நிகழ்வுகளும் கண் முன்னே ஓடிற்று. இந்த கலியுகம் அழிய இயற்கைச் சீற்றங்கள் தேவை இல்லை, இந்த பிணந்தின்னிகளே போதும். இந்த மனித நேயமற்ற மடச் சாம்பிராணிகள் திருந்துவார்கள் என்று நம்பினால் பெரும் முட்டாள்தனம். இந்த கொலைக் கொடூரர்களை சொல்லியும் திருத்த முடியாது, பட்டும் திருந்த மாட்டார்கள். இந்த தீவிர வாதத்தால் தங்கள் கொள்கைகள் நிறைவேறும் என்ற முட்டாள்தனம் அழிந்தாலே இவ்வுலகம் காப்பாற்றப்படும்.