Monday, June 20, 2011

சில கவிதை கிறுக்கல்கள்..!


என் மனம் கலங்க
என் கண்கள்  கலங்க
என் உதடுகள் துடிக்க
என் கைகள் மௌனமாக
அசைத்தது
உன்னை வெளிநாட்டிற்கு
வழியனுப்பியபோது.....
நீ என்று வருவாய்
என் கரம் பிடிக்க?????
உன் நினைவுகளுடன்
என்றும் நான்..!


என் சிரிப்பிற்கு பின்
மறைந்து இருக்கும்
கண்ணீரை
யாரால்
உணர முடியும்
உன்னை தவிர..!


இவ் உலகத்திற்கு
உன்னை காட்டிய
உன் பெற்றோருக்கு
நன்றி சொல்லவா???
இல்லை நீ தான்
என் உலகம் என்று
உன்னை காட்டிய
என் பெற்றோருக்கு
நன்றி சொல்லவா???
இருவருக்கும்
என் கோடான கோடி
நன்றிகள்..!

Friday, April 22, 2011

எனது வாழ்த்துக்கள் தோழா..!


காலையில் சிரிக்கும்
சூரியனின் ஒளியையும்
மாலையில் சிரிக்கும்
சிட்டுக்குருவியின்
இனிமை ஒலியையும்
இரவில் சிரிக்கும்
நிலவின் அழகையும்
உன் புன்னகையில்
கண்டேன்..!
உன் கொஞ்சும்
பேச்சு
என் செவிக்கு
குயில் பேசுகிறதா
என வியப்பூட்டியது..!!
உன் மழலை
முகத்தில்
குழந்தையின் செல்லக்
குறும்பை ரசித்தேன்..!!!
உலகின் அதிசய
நிலவாய் தோன்றிய
என் செல்லமே
என்றும்
புன்னகையுடன்
வெற்றி நடைபோட
எனது
வாழ்த்துக்கள்..!!!!

நண்பா!!!!!



சூரியனைப் போல்
என் வாழ்வில்
உதயமானாய்..!
நிலவைப் போல்
என் வாழ்வில்
அழகானாய்..!!
விண்மீனைப் போல்
என் வாழ்வில்
மின்னுனாய்..!!!
ஆலமரம் போல்
என் மனதில்
இடம் பிடித்தாய்..!!!!
என் வெற்றிப்
படிகளுக்கு அடிக்கல்
நாட்டினாய்..!!!!!
என் வாழ்க்கைக்கு
திருப்பு முனையானாய்..!!!!!!
என் கவிதைகளுக்கு
எழுத்தானாய்..!!!!!!!
எனக்கு சிறந்த
நண்பனானாய்..!!!!!!!!
நட்புக்கு
இலக்கணமானாய்...!!!!!!!!!

Sunday, March 13, 2011

என் நட்புக்காக!!!!!

ஆயிரம் கசப்புகள்
மனதில்...
ஏன் எதற்கு
என புரியாமல்
விளிதெரியாமல்
விடையறியாமல்
வழியறியாமல் நடமாடினேன்...
என் விழிதிறந்து
விடையரிந்து
வழியறிந்து
என் கைபிடித்து
வழி நடத்திய
என் உயிர் நண்பனே
உன்னுடன்
என்றும் துணையிருப்பேன்!!!!!

கல்லோடைப்போரின் வாழ்கை!

கல்லோடைகும் சத்தம்
கேட்டேன்...
அவர்கள் உடல்
வலியை கண்டேன்...
அவர்கள் வாழ்கையை
கேட்டேன்...
அவர்கள் மன
வலியை கண்டேன்!!!!!

Friday, January 28, 2011

முதன் முதலாக !!!!!


சூரியன் வெளி வர
மொட்டுக்கள் மலர
அருவியில் நீர்த்துளிகள் கொட்ட
குழந்தைகள் தன் செல்ல
சிரிப்புடன் சிரிக்க
அக்காலை பொழுதில்
சந்தித்தேன் உன்னை
முதன் முதலாக !!!!!

காலையில் Shuttle பயணம் !!!!!


காலை 7 மணி ஆனால் போதும் பரபரப்புடன் அரக்கபரக்க கிளம்பி Shuttle லை வேக நடையுடன் நடந்து ஓடி நின்றால் அன்று தான் நம்ம Shuttle லேட் ஆகா வரும் சென்னை டிராபிக்கில் மாட்டி. ச்சச!!!!! பிகர் வந்ததே ஓடி வரும் போது,.. பிகர் மிஸ் ஆகிருச்சே மச்சி சரியா பார்க்காம.. "காத்திருந்து காத்திருந்து....." Shuttle லில் ஏறி நம்ம ரெகுலர் சீட்யில் அமர்ந்து காதில் ஹீட்செட் ஐ மாட்டினால் போதும், சொர்க்கம் தான்.. நம் தன்னந்தனி சிரிப்புடன் பயணிப்போம் நமக்கு பிடித்த நபரையும் நிகழ்சிகளையும் நினைத்துகொண்டு..... Parents வுடன் ஒரு ஹாய் ஹலோ குட் மோர்னிங் nu ஒரு போன் கால் போகும் வழியில்.. தலைமுடியை காய வைக்க கூட நேரம் இல்லாமல் அப்படி என்ன கிளிக்கிரோமோ தேரியவில்லை நாம், அதையும் Shuttle லில் தான்.. காதில் மெலோடீஸ் பாடல்களுடன் ஒரு நல்ல தூக்கம்.. தூக்கம் na தூக்கம் அப்படி ஒரு தூக்கம்.. அன்றாடும் ரயில்வே கேட்யில் மாட்டும் நம்ம Shuttle , நாம் குபேர தூக்கத்தில் இருக்கும் போது மட்டும் மாட்டாது..... பல சிக்னல்களை தாண்டி ஆபீஸ் கேட்யில்  நுழைகிறது Shuttle, சொர்க்கம் நரகமாகிறது அந்நொடி முதல்.....