Friday, April 22, 2011

எனது வாழ்த்துக்கள் தோழா..!


காலையில் சிரிக்கும்
சூரியனின் ஒளியையும்
மாலையில் சிரிக்கும்
சிட்டுக்குருவியின்
இனிமை ஒலியையும்
இரவில் சிரிக்கும்
நிலவின் அழகையும்
உன் புன்னகையில்
கண்டேன்..!
உன் கொஞ்சும்
பேச்சு
என் செவிக்கு
குயில் பேசுகிறதா
என வியப்பூட்டியது..!!
உன் மழலை
முகத்தில்
குழந்தையின் செல்லக்
குறும்பை ரசித்தேன்..!!!
உலகின் அதிசய
நிலவாய் தோன்றிய
என் செல்லமே
என்றும்
புன்னகையுடன்
வெற்றி நடைபோட
எனது
வாழ்த்துக்கள்..!!!!

நண்பா!!!!!



சூரியனைப் போல்
என் வாழ்வில்
உதயமானாய்..!
நிலவைப் போல்
என் வாழ்வில்
அழகானாய்..!!
விண்மீனைப் போல்
என் வாழ்வில்
மின்னுனாய்..!!!
ஆலமரம் போல்
என் மனதில்
இடம் பிடித்தாய்..!!!!
என் வெற்றிப்
படிகளுக்கு அடிக்கல்
நாட்டினாய்..!!!!!
என் வாழ்க்கைக்கு
திருப்பு முனையானாய்..!!!!!!
என் கவிதைகளுக்கு
எழுத்தானாய்..!!!!!!!
எனக்கு சிறந்த
நண்பனானாய்..!!!!!!!!
நட்புக்கு
இலக்கணமானாய்...!!!!!!!!!