Friday, January 28, 2011

முதன் முதலாக !!!!!


சூரியன் வெளி வர
மொட்டுக்கள் மலர
அருவியில் நீர்த்துளிகள் கொட்ட
குழந்தைகள் தன் செல்ல
சிரிப்புடன் சிரிக்க
அக்காலை பொழுதில்
சந்தித்தேன் உன்னை
முதன் முதலாக !!!!!

காலையில் Shuttle பயணம் !!!!!


காலை 7 மணி ஆனால் போதும் பரபரப்புடன் அரக்கபரக்க கிளம்பி Shuttle லை வேக நடையுடன் நடந்து ஓடி நின்றால் அன்று தான் நம்ம Shuttle லேட் ஆகா வரும் சென்னை டிராபிக்கில் மாட்டி. ச்சச!!!!! பிகர் வந்ததே ஓடி வரும் போது,.. பிகர் மிஸ் ஆகிருச்சே மச்சி சரியா பார்க்காம.. "காத்திருந்து காத்திருந்து....." Shuttle லில் ஏறி நம்ம ரெகுலர் சீட்யில் அமர்ந்து காதில் ஹீட்செட் ஐ மாட்டினால் போதும், சொர்க்கம் தான்.. நம் தன்னந்தனி சிரிப்புடன் பயணிப்போம் நமக்கு பிடித்த நபரையும் நிகழ்சிகளையும் நினைத்துகொண்டு..... Parents வுடன் ஒரு ஹாய் ஹலோ குட் மோர்னிங் nu ஒரு போன் கால் போகும் வழியில்.. தலைமுடியை காய வைக்க கூட நேரம் இல்லாமல் அப்படி என்ன கிளிக்கிரோமோ தேரியவில்லை நாம், அதையும் Shuttle லில் தான்.. காதில் மெலோடீஸ் பாடல்களுடன் ஒரு நல்ல தூக்கம்.. தூக்கம் na தூக்கம் அப்படி ஒரு தூக்கம்.. அன்றாடும் ரயில்வே கேட்யில் மாட்டும் நம்ம Shuttle , நாம் குபேர தூக்கத்தில் இருக்கும் போது மட்டும் மாட்டாது..... பல சிக்னல்களை தாண்டி ஆபீஸ் கேட்யில்  நுழைகிறது Shuttle, சொர்க்கம் நரகமாகிறது அந்நொடி முதல்.....