Sunday, September 26, 2010

நகரத்தில் நரக வாழ்க்கை



கிராமத்தில் இருக்கும் போது நகர வாழ்க்கை சொர்க்கம் என்று நினைக்கிறோம் உண்மையை அறியாமல். கிராமத்தில் இருப்பவர்கள் சாப்ட்வேர் என்ஜினியர் என்றால் கை நிறைய சம்பளம் என்று மட்டும் தான் எண்ணுகிறார்கள். ஆனால் இங்கு நம் நிலைமையோ  கொடுமையோ கொடுமை!!!!!!!!!!!! குடும்பம் இருந்தும் குதூகலம் இல்லாமல், பணம் இருந்தும் பயன் இல்லாமல், நகை இருந்தும் நகைச்சுவை இல்லாமல் இந்த நவரசமற்ற வாழ்கையை ரசனையற்று ரசித்து கொண்டு இருக்கிறோம். இது தேவையா என்று என்ன தூண்டும் தினமும் நம் மனதில்??????? எந்த நேரம் ஆபீஸ்கு போவோம் எந்த நேரம் ஆபீசில் இருந்து கிளம்புவோம் என்று தெரியாமல் காலையில் கண் விழிபோம். மனைவி காபி போட்டு  இருப்பால் என்று நினைத்து கண் விழிக்க மனைவிடம் இருந்து ஒரு குரல், மாமா காபி ரெடியா?? எனக்கு ஆபீஸ்கு நேரம் ஆச்சு. காபியின் சூட்டையைவிட சண்டை சூடாக ஆரம்பித்தது காலையிலே. 5 நிமிடம் தான்ஆகும் பயண நேரம் ஆனால் டிராபிக் என்னும் கொடுமையால் 5 மணி நேரம் பயணிப்போம் அந்த தூரத்தை. ஆபீஸ்கு  போனால் அங்கு அதற்கு மேல் தலைவலி,  என்று ஆபீஸ்சில் இருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று நினைகிறோமோ அன்று தான் Issues , கிளைன்டுடன் கால்ஸ் என இடத்தை விட்டு நெகர முடியாத அளவுக்கு வேலை இருக்கும். லீவ் பேலண்ச இருந்தும் லீவ் எடுக்க முடியாமல் இந்தியாவில் இருந்து கொண்டு US , UK நேரத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறோம். பொங்கல்,தீவாளிக்கு ஹொலிடே இல்லையாம் US , UK வில் திருவிழா என்றால் மட்டும் தான்  நமக்கு ஹொலிடே வாம். என்ன கொடும சார் இது!!!!!!!!!!!!!!!! குடும்பத்திலயும் குதூகலம் இல்லை  ஆபீசெலயும் நிம்மதி இல்லை இந்த நகரத்தில்(நரகத்தில்) எப்போதும் குழப்பமான மன நிலையில் நரக வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

Saturday, September 25, 2010

My Camera's Timely Clicks




அன்பும் அருளும்

உங்கள் அன்பும், அருளுமுடன்  எனது படைப்புகளை சித்திரத்தில் பதிக்கிறேன்.